What are all the dog food items , not to feed to dogs and puppies

நாய்களுக்கு கொடுக்க கூடாத உணவு பொருட்கள் (What not to feed to dogs )

நாய்களுக்கு கொடுக்க கூடாத உணவுப் பொருட்கள்

  1. சாக்லேட் (Chocolate ) மற்றும் காஃபி ( Coffee )

Dog food items காஃபியிலுள்ள கெபைன் ( Caffeine ) மற்றும் சாக்லேட்லிலுள்ள மெத்தில் சாந்தைன் ( Methylxanthine)  போன்ற வேதிப்பொருட்கள், நாய்களுக்கு வாந்தி ( Vomiting ), வயிற்றுப்போக்கு ( Diarrhea ), மூச்சு திணறல் ( Panting ), உடல் நடுக்கம் ( Tremor ), இதயத்துடிப்பு அதிகமாக்குதல் ( Abnormal Heart Rate ) போன்ற பாதிப்புக்களையும், சில நேரங்களில் இறப்பையும் ( Death ) உண்டாக்கின்றது. அடர்ந்த பழுப்பு நிறம் ( Dark Brown ) கொண்ட சாக்லெட் வகைகளில், அதிக மெத்தைல் சாந்தைன் இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

  1. வெங்காயம் (Onion) மற்றும் பூண்டு ( Garlic )

நாய்கள் வெங்காயம் மற்றும் பூண்டை அல்லது வெங்காயம் மற்றும் பூண்டு அதிகம் கலந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்ளும் பொழுது அதிகப்படியான வயிற்று எரிச்சல் ( Gastrointestinal Irritation ), மற்றும் இரத்த சிவப்பு அனுக்கள் (Red Blood Cells-RCB ) பாதிக்கப்பட்டு, இரத்தச் சோகையையும் (Anaemia) உண்டாக்குகின்றது.

3.வீட்டில் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு (Common salt) அல்லது சோடியம் குளோரைடு ( Nacl )

வீட்டில் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பை அதிகமாக நாய்கள் உட்கொள்ளும் பொழுது, அதிகப்படியான தாகம் எடுத்தல் ( Excessive Thirst ), வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் நடுக்கம் ( Tremor ), காக்க வலிப்பு (seizures) மற்றும் இறப்பை உண்டாக்கின்றது.

4.திராட்சைப்பழம் ( Grapes )

உலர்ந்த திராட்சைப்பழத்திலுள்ள ( Dried Grapes )  ரெசின் எனும் வேதிப்பொருள் சிறுநீரக செயலிலைப்பை ( Kidney Failure ) ஏற்படுத்தும் தன்மை ( Raisin Toxicity ) கொண்டது. மேலும் திராட்சைப்பழரசத்திலுள்ள ( Grapefruit Juice ) பல்வேறு வேதிப்பொருட்கள், கல்லீரலிலுள்ள (  Liver ) மருந்துகளை ( Drug ) உடைக்க உதவும் நொதிகளை செயல் இழக்க செய்து, மருந்துகளினால் ஏற்ப்படும் பக்க விளைவுகளை ( Side Effects ) அதிகமாக்கும்.

5.சைலிட்டால்( Xylitol )

சைலிட்டால் ( Xylitol ) என்னும் வேதிப்பொருள் பல்வேறு இனிப்பு மற்றும் பலகாரங்களில், இனிப்பு சுவையை ( Sweetener ) கூட்டுவதற்க்ககாக பயன்படுத்தப்படுகின்றது. இவை சாக்லெட் மற்றும் பற்பசையில் ( Tooth Paste )  அதிகமாக உள்ளது. கடைகளில் தயாரிக்கப்பட்ட இனிப்பு அதிகமுள்ள் பலகாரங்களை நாய்களுக்கு கொடுக்கும்பொழுது, அதிலுள்ள  சைலிட்டால் அதிகப்படியான இன்சுலின் ( Insulin ) சுரப்பை தூண்டி, ஹைப்போ-கிளைசிமியா அல்லது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைதல் ( Hypoglycemia ) மற்றும் மயக்கத்தை உண்டாக்குகின்றது. மேலும் நாய்கள் சைலிட்டால் ( Xylitol )  கலந்த பலகாரங்களை, அதிகமாக உண்ணும் பொழுது கல்லீரல் பாதிப்படைதல் ( Liver Failure ), வாந்தி, காக்க வலிப்பு ( Seizure ), நினைவிழத்தல் ( Coma ) மற்றும் சில நேரத்தில் நாய்களில் இறப்பையும் ( Death ) உண்டாக்குகின்றன.

6.பால் ( Milk )

பாலில் உள்ள லாக்டோஸ் ( Lactose ) என்னும் மாவுச்சத்தை செரிக்க உதவும் லாக்டேஸ் ( Lactase ) என்னும் நொதி ( Enzyme ) நாய்களில், அதிலும் நாய்க்குட்டிகளுக்கு சுரப்பதில்லை. எனவே பாலை அதிகமாக கொடுக்கும் பொழுது நாய்க்குட்டிகள் வயிற்றுப்போக்கால் ( Diarrhea ) அவதிப்பட அதிக வாய்ப்புள்ளது.

One thought on “What are all the dog food items , not to feed to dogs and puppies”

Leave a Reply

Your email address will not be published.