kanni , chippiparai, rajapalayam hounds and combai dogs )

தமிழக வேட்டை நாய் இனங்கள் ( Native Breeds of Tamilnadu )

kanni,chippiparai,rajapalayam hounds,combai dogs நமதுமேம்பட்ட வாழ்க்கை முறைகளையும் கலாச்சாரத்தையும் தலைகீழாக புரட்டிப்போட்டஆங்கிலேயர்களின் வருகை நமது செல்லப் பிராணிகளையும் விட்டுவைக்கவில்லை. மருது பாண்டியர்,நாயக்க மன்னர்களுடன் போரிலும்,வேட்டையிலும் வலம்வந்த தமிழ் மண்ணிற்கு சொந்தமான கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை மற்றும் ராஜபாளையம் போன்ற வேட்டை நாய் இனங்கள் இன்று முக்கியத்துவம் இழந்து அழியும் தருவாயில் உள்ளது.

ஆங்கிலேயர் வருகையினால் அவர்களுக்கு சொந்தமான நாய் இனங்கள் மிக எளிதாக இந்திய மண்ணில் செல்வாக்கு பெறத் தொடங்கின. பாமர மக்கள் கூட ஆங்கிலேய மற்றும் ஐரோப்பிய நாய் இனங்களை வளர்த்து வருகிறார்கள்.

இந்த இனங்களை நண்பர்கள் வீட்டிலோ அல்லது வேறு எங்காவது பார்க்கும்பொழுதோ எந்த வித குழப்பமும் இல்லாமல் தெளிவாக அடையாளப்படுத்துகிறார்கள் ஆனால் தமிழ் மண்ணின் மைந்தர்களான கன்னி,சிப்பிப்பாறை,கோம்பை நாய் இனங்களை பெரிதாக அறிந்திருப்பது இல்லை.

இந்த வகை இனங்களின் அருமை பெருமைகளை தெரிந்தவர்கள் வளர்க்க முயலும்போது, இது என்ன தெருநாய்க் குட்டியா ? எனக் கேட்கும் அளவிலேயே நமது வேட்டை இனங்கள் குறித்த தெளிவு நமது மக்களிடம் இருக்கிறது.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் வீரமிக்க தமிழ்நாட்டு வேட்டைநாய் இனங்களின் முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கின.அழிந்து போன நமது வேட்டை நாய் இனங்களின் வரலாற்று சிறப்புகளையும், பெருமைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதும், அழிந்து கொண்டு வரும் ஒரு இனத்தை மீட்டு எடுக்கும் முயற்சியின் முதல் படியே இந்த கட்டுரையின் நோக்கம்.

சிப்பிப்பாறை மற்றும் கன்னி இன நாய்களின் பரிணாமம்(kanni,chippiparai, rajaplayam hounds and combai dogs)

பொதுவாக நாய்கள் அனைத்தும்(Grey wolf) ஓநாயின் வழித்தோன்றல்களே. நாய்களின் குண நலன்களும், மரபியல் பண்புகளும்  ஓநாயை போன்றே உள்ளது என பல்வேறு மரபியல் சோதனைகளின் ( DNA Studies) முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டு வேட்டை நாய் இனமான கன்னி மற்றும் சிப்பிப்பாறை ஆப்பிரிக்க கண்டத்தின் சலூக்கி (Saluki) இன வகையின் வழித்தோன்றலாகவே கருதப்படுகிறது. சலூக்கி நாய்களைப் பற்றி பைபிளில் குறிப்புகள் உள்ளன. சலூக்கி நாய்  ராஜ வம்ச நாய் இனமாக ( Royal Ancient Dogs) இன்றளவிலும் மதிக்கப்பட்டு வருகிறது.

சரி இந்த வகை நாய் இனங்கள் எப்படி கடல் கடந்து தமிழகத்தின் தென் பகுதியை அடைந்தது என கேள்வி எழுவது இயல்பே. புலம் பெயர்ந்த ஆப்ரிக்க மக்களுடன் சேர்ந்து சலூக்கி இனமும் தமிழகத்தின் தென் பகுதியான லெமூரியா கண்டத்தை அடைந்துஇருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகவே உள்ளது.

எடுத்துக்காட்டாக மதுரை மாவட்டம் ஜோதிமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த விருமாண்டி தேவரின் குரோமோசோமில் (Chromosomes) உள்ள M130 ஜீன் ஆப்பிரிக்க பழங்குடியினரிடமும் காணப்படுகிறது. இந்த M130 ஜீன் பொதுவாக சுமார்70 ஆயிரம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து புலம் பெயர்ந்து உலகின் பல்வேறு கண்டங்களில் குடி அமர்ந்த மக்களிடையே காணப்படுகிறது.

விருமாண்டித் தேவரின் முன்னோர்பல்லாயிரம் வருடங்களுக்கு முன், ஆப்பிரிக்காவிலிருந்து தமிழகத்தின் தென்பகுதிக்கு புலம்பெயர்ந்தது(migration) ஆராய்ச்சியின் மூலம் தெள்ளத் தெளிவாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதே போன்று இன்று ஆப்பிரிக்க கண்டத்தில் காணப்படும் சலூக்கி (Saluki), தமிழகத்தின் தென் பகுதியை அடைந்து, சீதோஷ்ண மற்றும் பருவகால மாற்றங்களால், தங்கள் உடலமைப்பை மாற்றி (தகவமைப்பு) இன்று உள்ள கன்னி மற்று சிப்பிப்பாறை நாயாக மாறி இருக்கக்கூடும்.

நமது இன வகை நாய்களின் சிறப்பு அம்சங்கள் kanni,chippiparai,rajapalayam hounds,combai dogs:

நமது நாய் இனங்கள் ( Hounds of Tamilnadu) பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இயற்கை தேர்வின் ( Natural Selection Theory) மூலம் தேர்வு செய்யப்பட்டு “தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்கும்” ( Survival Of the Fittest ) என்னும் டார்வினின் பரிணாமக் கொள்கையை நிரூபணம் செய்து நிலைத்து நிற்கும் இயற்கையான ( Ancient naturally evolved Breed) நாய் இனங்கள் ஆகும். இவைகள் அனைத்து விதமான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் உண்டாகும் தோற்று நோய்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு(Natural immunity) சக்தி கொண்டது.

இது மட்டுமல்லாது உன்னி,பேன் போன்ற புற ஒட்டுண்ணிகள் ( Ecto parasites) ,உருளை,நாடாப் புழுக்கள் போன்ற அக ஒட்டுண்ணிகள் (Endo Parasites) மற்றும் புரோட்டோசோவாக்களால்  அதிக பாதிப்புக்கு உள்ளாவதில்லை. மேலும் நமது வெப்ப மண்டல   ( Tropical Climate) காலநிலைக்கு ஏற்ற இனமாகும். அயல் நாட்டு இனங்களில் காணப்படும் மரபு நோய்க் கோளாறுகள் ( Inherited and genetic related diseases) நமது  நாய் இனங்களில் வருவது இல்லை.

ஆங்கிலேய மற்றும் ஐரோப்பிய இன வகை நாய்கள்:

பொதுவாக ஆங்கிலேய மற்றும் ஐரோப்பிய இன வகை நாய்கள், பல்வேறு வகை இன நாய்களை இனக் கலப்பு( Cross Breeding and Selective Breeding) செய்து செயற்கையாக ( Manmade or Artificial Breed) உருவாக்கப்பட்டதே. இதனாலேயே மேல்நாட்டு நாய் இனங்களில் பல்வேறு விதமான மரபு நோய்க் கோளாறுகள்( Inherited and genetic related diseases)  அதிகம் காணப்படுகிறது.

இந்த வகை இனங்கள் மிக எளிதில் தொற்று நோய்களால் பாதிக்கப்படுவதுடன் பல்வேறு வகையான வளர்சிதை மாற்ற நோய்களுக்கும் ( Metabolic Disease) உள்ளாகிறது. சிப்பிப்பாறை மற்றும் கன்னி  நாயின் முக அமைப்பு நீண்டு கூராக ( Dolichocephalic) காணப்படுகிறது.

இது ஓநாயின் முக அமைப்பை ஒத்துள்ளது. நாட்டுப்புறங்களில் இன்றளவும், சிப்பிப்பாறையின் இனத்தின் தூயத்தன்மையை அறிய, நாம் கிராமங்களில் டீ கடைகளில் பயன்படுத்தப்படும், டீ கிளாசின் உள்ளே, நாயின் தலையை உள்ளே விடவைப்பார்கள்.

நாயானது கிளாசின்  அடிப்பாகத்தை நாக்கால் தொட்டு சுவைக்கும் அளவுக்கு குறுகலான முக அமைப்பை கொண்டிருந்தால் மட்டுமே, அந்த நாய் தூய சிப்பிப்பாறை இனமாக கருதப்படும்.     செயற்கையாக உருவாக்கப்பட்ட(Artificial or Manmade breed) இனங்களின் முக அமைப்பு அகன்றும் மூக்கு தட்டையாகவும் ( Brachicephalic) காணப்படுகிறது.

எடுத்துக்காட்டாக ராட்வெயிலர்       ( Rottweiler), பாக்ஸர் ( Boxer), பக் (Pug) மற்றும் புல் மேஸ்டிப் ( Bull Mastiff ) போன்ற நாய் இனங்களில் இதய நோய் மற்றும் சுவாசக் கோளாறுகள் காணப்பட இதன் தட்டை முக அமைப்பும் ஒரு முக்கிய காரணம் ஆகும். மேலும் இவ்வகை நாய் இனங்கள் நமது தட்பவெப்ப நிலையைத்தாங்கிக் கொள்ளும் திறனும் குறைவாக உள்ளது…

பொதுவாக கன்னி மற்றும் சிப்பிப்பாறை இன நாய்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வேட்டை ஆடுவதால் அதற்கேற்ற உடல் தகவமைப்பைப் பெற்றுள்ளது. வேகமாக ஓடுவதற்கு ஏற்றவகையில் நீண்ட மெல்லிய கால்களையும், சிறுத்தை போன்ற கீழ் இறங்கிய மார்புப் பகுதியையும் (Deep Chest) கொண்டுள்ளது. வேட்டையின் போது தொடர்ந்து ஓடுவதால் மற்ற நாய் இனங்களின் இதயத்தை விட வேட்டை நாய்களின் இதயம்  ( Athletic Heart and Cardiomegaly) சற்று பெரியதாகவே இருக்கும்.

இத்தகவமைப்பு வேகமாக ஓடும்பொழுது தேவையான அதிகரத்த ஓட்டத்தையும் ஆக்சிஜனையும் திறம்பட அளிக்கிறது. பொதுவாக வேட்டை நாய் இனங்களுக்கு பார்வைத் திறன் அதிகமாகவும், மோப்ப சக்தி சற்று குறைவாகவும் காணப்படுகின்றது. வேட்டை நாய்களின்கண்ணின் ரெட்டினாவில் அதிகமான நியூயரான்கள்(Ganglion)பட்டையாக காணப்பாடுவதேகூரிய பார்வைத் திறனுக்கு காரணமாகும்.

ஆகையால்தான் வேட்டை நாய்கள்,இரவு வேட்டையில்கூட வேகமாக ஓடும் இரையை மிகத் துல்லியமாக தாக்கி வேட்டையாட முடிகின்றது.இதனலாயே இவைகள் சைட் ஹௌண்ட்ஸ் ( Sight Hounds)  என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன…..

Author – Dr.R.Kishore kumar MVSc.,

4 thoughts on “kanni , chippiparai, rajapalayam hounds and combai dogs )

  1. Thagavaluku nandri ayya.. Nanum pattukottai kasangadu serthavan than.. Ungalai kandu perumai adaigirom

Leave a Reply

Your email address will not be published.