
Deworming schedule for Puppies and Dogs ( நாய்களில் குடற்புழு நீக்ககம்)
குடற்புழு நீக்கம் ( Deworming ) என்றால் என்ன ?
deworming schedule puppy,dogs நாய்க்குட்டிகளில் குடலில் பல்வேறு வகையான புழுக்கள் ( Worms ) வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த புழுக்கள் அதன் உடலமைப்பை பொறுத்து கொக்கி புழுக்கள் ( Hook Worms ), உருளை புழுக்கள் ( Round Worms Or Nematodes ), நாடாப்புழுக்கள் ( Cestodes Or Tape Worms ) மற்றும் தட்டைப்புழுக்கள் ( Flukes Or Trematodes ) என வகைப்படுத்தப்படுகின்றது.
இந்த குடற்ப்புழுக்களின் முட்டைகள் கலந்த அசுத்தமான உணவுப்பொருட்கள் ( காய்கறிகள், பழம், இறைச்சி ) மற்றும் மண்ணை சாப்பிடுவதன் மூலம் குடலைத் சென்றடைந்து, குஞ்சு பொரித்து, லார்வக்களாக மாறி, பின்னர் பெரிய புழுக்களாக வளர்கின்றன.
இந்த குடற்புழுக்கள், அனைத்து சத்துக்களையும் ( Nutrients ) குடலிருந்து உறிஞ்சி, நாய்க்குட்டிகளில் வளர்ச்சி குறைந்து போகுதல் ( Retarded Growth ), இரத்தசோகை ( Anaemia ), நோய் எதிர்ப்புசக்தி குறைதல் ( Low Immunity ), தோலில் ஒவ்வாமை ( Skin Allergy ) பானை போன்று, வயிறு வீங்கி விடுதல் மற்றும் வயிற்றுப் போக்கு ( Diarrhoea ) போன்ற பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகின்றது.
நாய்க்குட்டிகளுக்கு எத்தனை முறைகுடற்புழு நீக்கம் ( Deworming ) செய்ய வேண்டும்?
- நாய்குட்டிகளுக்கு – 2 வாரங்களுக்கு ஒருமுறை என ( Once In Every 2 Weeks Till 3 Months Of Age ) மூன்று மாத வயது வரை, மொத்தம் 6 முறை குடற்புழுநீக்கம் செய்ய வேண்டும்.
- 3 மாதத்திலிருந்து 6 மாத வயது முடிய – மாதத்திற்கு ஒருமுறை என ( Once In A Month From 3 Month To 6 Month Of Age ) மொத்தம் 3 முறை குடற்புழுநீக்கம் செய்ய வேண்டும்.
- 6 மாதத்திற்கு பிறகு – வருடத்திற்கு நான்குமுறை ( After Six Months Of Age 4 Times/Year ), அதாவது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என மொத்தம் 4 முறை குடற்புழுநீக்கம் செய்ய வேண்டும்.
- வளர்ந்த நாய்களுக்கு ( Adult Dog )– மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என மொத்தம் 4 முறை குடற்புழுநீக்கம் செய்ய வேண்டும் ( வருடத்திற்கு நான்குமுறை – 4 Times / Year ).
- பெண் நாய்களுக்கு ( Bitch )– இனப்பெருக்கத்திற்கு ( Once Prior To Mating Or Crossing ) முன்பாக ஒரு முறையும், குட்டி ஈன்றவுடன் ( Once Immediately After Whelping ) ஒருமுறையும், குட்டி ஈன்ற இருவாரம் கழித்து ஒரு முறையும் ( Once 2 Weeks After Whelping ), நான்கு வாரம் கழித்து ஒரு முறையும் ( Once 4 Weeks After Whelping ), மொத்தம் நான்கு முறை ( 4 Times ) குடற்புழுநீக்கம் செய்ய வேண்டும்.
குடற்புழு நீக்கதிற்க்கு, ஒரேவிதமான மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்தலாமா ?
deworming schedule puppy,dogs கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. தொடர்ந்து ஒரேவிதமான குடற்ப்புழுநீக்க மருந்தை பயன்படுத்தினால் மருந்துக்கு எதிரான சக்தியை ( Anthelmintic Resistance) குடற்புழுக்கள் பெற்றுவிடும். எனவே வெவ்வேறு வேதியியல் அமைப்பை கொண்ட ( Molecules ) மருந்துகளை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் நாளடைவில் எந்த குடற்புழு நீக்க ( Dewormer ) மருந்தும் அந்த நாயின் உடலில் வேலை செய்யாது. குடற்ப்புழுநீக்க மருந்தை, கால்நடை மருத்துவரின் ஆலோசனையோடு மட்டுமே கொடுக்க வேண்டும்
Thank you so much for the great article, it was fluent and to the point. Cheers.
Thank you so much for the great article, it was fluent and to the point. Cheers.
Please say some name of deworming syrups