
kanni,chippiparai and rajapalayam hound dogs
kanni chippiparai கன்னி ,சிப்பிப்பாறை நாய் மற்றும் ராஜபாளையம் நாய்களை பற்றிய விரிவான காணொளி (Details video about kanni,chippiparai and rajapalayam houn dogs )
நமது இன வகை நாய்களின் சிறப்பு அம்சங்கள்
நமது தமிழ்நாட்டு நாய் இனங்கள் ( Hounds of Tamilnadu ), பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி, இயற்கை தேர்வின் ( Natural Selection Theory) மூலம் தேர்வு செய்யப்பட்டு “தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்கும்” ( Survival Of the Fittest ) என்னும் டார்வினின் பரிணாமக் கொள்கையை நிரூபணம் செய்து நிலைத்து நிற்கும் இயற்கையான ( Ancient Naturally Evolved Breed ) நாய் இனங்களாகும்.
இவைகள் அனைத்து விதமான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் உண்டாகும் தொற்று நோய்களுக்கு எதிராக, இயற்கையான நோய் எதிர்ப்பு ( Natural immunity ) சக்தியை பெற்றிருப்பது மற்றொரு தனிச்சிறப்பாகும். இது மட்டுமில்லாது உன்னி, பேன் போன்ற புற ஒட்டுண்ணிகள் ( Ecto parasites) , உருளை,நாடாப் புழுக்கள் போன்ற அக ஒட்டுண்ணிகள் ( Endo Parasites) மற்றும் புரோட்டோசோவாக்களால் ஏற்ப்படும் நோய்களால் பெரியளவில் பாதிக்கப் படுவதில்லை. மேலும் நமது நாய் இனங்கள், நமது வெப்ப மண்டல ( Tropical Climate) காலநிலைக்கு ஏற்ற வகையாகும். அயல் நாட்டு இனங்களில் காணப்படும் மரபு நோய்க் கோளாறுகள் ( Inherited And Genetic Related Diseases ) நமது நாய் இனங்ககளை தாக்குவது இல்லை.
kanni
கன்னி ,சிப்பிப்பாறை நாய் மற்றும் ராஜபாளையம் நாய்களை பற்றிய விரிவான காணொளி (Details video about kanni,chippiparai and rajapalayam houn dogs )