Dr. R.கிஷோர் குமார் M.V.SC.,
dogs health care author டாக்டர். ரா.கிஷோர் குமார் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் அமைந்திருக்கும் காசங்காடு, மாளியக்காடு என்னும் சிற்றூரில் பிறந்தவர். டாக்டர்.ரா.கிஷோர் குமார் அவர்கள் சிறு வயதிலிருந்தே பறவைகள் மற்றும் செல்லப் பிராணிகளின் மீது கொண்ட தீராத ஆர்வத்தால் சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில், சேர்ந்து கால்நடை மருத்துவப் படிப்பில் ( Veterinary Science ) சேர்ந்து, கால்நடை மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுகலை படிப்பை சிறப்பாக முடித்து, தற்பொழுது வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டையில் அமைந்துள்ள தமிழக அரசால் நடத்தப்படும், கால்நடை செல்வங்களுக்குத் தேவையான தடுப்பூசி மற்றும் மருந்துகள் தயாரிக்கும் கால்நடை நோய்த் தடுப்பு மற்றும் மருந்து நிலையத்தில் ( Institute Of Veterinary Preventive Medicine – IVPM ) உதவி ஆராய்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருகின்றார்.
மேலும் “நாய் இனங்களின் வரலாறு மற்றும் வளர்ப்பு முறைகள் “( விகடன் பிரசுரம் வெளியீடு) ,என்ற நாய்களைப்பற்றிய விரிவான புத்தகத்தையும் எழுதி உள்ளார்.
அவர் தனது வீட்டில் தமிழ் நாட்டு நாய் இனங்களான சிப்பிப்பாறை,கோம்பை, ராஜபாளையம், கன்னி ஆகிய நாய்களையும், அயல் நாட்டு நாய் இனங்களான ராட்வீலர்ர், பக் போன்ற நாய் இனங்களை பல ஆண்டுகளாக வளர்த்து வருகின்றார். மேலும் அழியும் தருவாயில் இருந்த தமிழ் நாட்டு நாய் இனங்களைப்பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆங்கிலம் மற்றும் தமிழ் முன்னணி நாளிதழ்களில் பல்வேறு கட்டுரைகளையும், தமிழ் நாட்டு இனங்களை வளர்ப்பதை ஊக்குவிற்பதற்க்காக யு டியுப்பில் drkarnakishor@gmail.com என்ற மின்னஞ்சல் ( You Tube ) கோம்பை நாய் பற்றிய பாடல் ஒன்றையும் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் மற்றும் நாய்களை தாக்கும் கொடிய நோய்களை பற்றிய விளக்கமடங்கிய ஒளிப்பதிவுகளையும் ( Video ) வெளியிட்டுயுள்ளார், முகநூலில் ( Facebook ) தமிழ் நாட்டு நாய் இனங்களை விரும்பும் ஆர்வலர்களை ஒன்று சேர்க்கும் வகையில், பல ஆயிரம் பேர் கொண்ட கழுமத்தையும் நடத்தி வருகின்றார். இவர் நாய்களுக்கு உண்டாகும் நோய்களைப்பற்றியும், அதன் தடுப்பு முறைகளைப் பற்றியும் பல்வேறு ஓளிப்பதிவு பதிவுகளை, விரிவான தமிழ் உரையுடன் கூடிய செல்லப்பிராணி ஆர்வலர்களுக்காக இணையதளத்தில் ( You Tube ) வெளியிட்டுளார்….( https://www.youtube.com/user/drkarnakishor?sub_confirmation=1 )