தடுப்பூசி ( Vaccination for Puppies and Dogs )

தடுப்பூசியும், நோய்த்தடுப்பு முறைகளும் ( Vaccination ).

  1. தடுப்பூசி (Vaccine) என்றால் என்ன?

vaccine,vaccination,puppy,dog தடுப்பூசி என்பது நோய்க்கு காரணமான பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்க்கிருமிகளின், நோய் உண்டாக்கும் திறனை குறைத்து அல்லது வீரியத்தை குறைத்து (Virulence) தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.

இவ்வாறு தயாரிக்கப்படும், தடுப்பூசிகள் உடம்பில் ஊசியாக செலுத்தப்படும்பொழுது, நோய் எதிர்ப்புக் காரணிகளை (Antibodies) உருவாக்கி, கொடிய நோய்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ( Immunity ) சக்தியை உண்டாக்கி, நாய்க்குட்டிகளை பல்வேறு கொடிய நோய்களின் தாக்குதலிருந்து நாய்களையும், நாய்க்குட்டிகளையும் காப்பாற்றுகின்றது.

  1. நாய்க்குட்டிகளுக்கு தடுப்பூசி (Vaccine) போட வேண்டுமா ?

தாய் நாய்களுக்கு சரியான முறையில் தடுப்பூசி போடப்பட்டு இருந்தால், நோய் எதிப்புக் காரணிகள் அல்லது ஆண்ட்டிபாடிஸ் ( Antibodies ) தாய் நாயின் பாலின் ( Milk ) வழியாக, பால் ஊட்டும் பொழுது புதிதாக பிறந்த நாய்க்குட்டிகளுக்கு சென்றடைந்து, குட்டிகளை பல்வேறு நோய்களில் இருந்து 28 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை ( 3 மாதம் ) காப்பாற்றுகின்றது.

தாய் நாயின் பால் வழியாக பெறப்பட்ட நோய்எதிர்ப்புச்சக்தி, நாய்க்குட்டிகளில் படிப்படியாக குறைந்து போய்விடும்.

இந்த நோய் எதிர்ப்பு சக்தி குட்டிகளில் குறையும் நாட்களை வைத்தே தடுப்பூசி போடப்பட வேண்டிய நாள் கணக்கிடப்பட்டு மற்றும் தடுப்பூசி போட வேண்டிய கால அட்டவணை ( Vaccination) அறிவுறுத்தப்படுகின்றது.

உதாரணமாக வெறி ( ரேபீஸ்-Rabies ) நாய் கடிப்பதால் உண்டாகும், ரேபீஸ்   நோய்க்கெதிரான, தாய் நாயின் சீம் பாலின் வழியாக பெறப்பட்ட எதிர்ப்புசக்தி குட்டிகளில், சுமார் 90 நாட்களில் குறைந்து விடும். ஆகையால் நாய்க்குட்டிக்கு பிறந்த மூன்றாவது மாதத்தில் ( 90-வது  நாள் ) ரேபீஸ் நோயைத் தடுக்கும் ஆன்ட்டி ரேபிஸ் தடுப்பூசியை ( ARV-Anti Rabies Vaccine ) கண்டிப்பாக போட வேண்டும்.

  • நாய்க்குட்டி பிறந்த 4வது வாரம் அதாவது 28வது நாள்,  Nobivac Puppy DP  தடுப்பூசியைப் போட வேண்டும்.நாய்க்குட்டி பிறந்த 8வது வாரம் ( 56வது நாள் )-vaccine Nobivac DHPPi + Nobivac Lepto ) தடுப்பூசியை போட வேண்டும்.
  • நாய்க்குட்டி பிறந்த 10 முதல் 12வது வாரம் ( 70 முதல் 90 நாட்களுக்குள் )- ( Nobivac DHPPi + Nobivac Lepto ) தடுப்பூசியை பூஸ்டர் டோஸ்ஸாக ( Booster Dose போட வேண்டும்.
  • Nobivac Puppy DP போடாத நாய்க்குட்டிகளுக்கு, 45 வது நாள் Nobivac DHPPi + Nobivac Lepto ) தடுப்பூசியையும், இரண்டு வரங்கள் கழித்து, மீண்டும் ( Nobivac DHPPi + Nobivac Lepto )  தடுப்பூசியை பூஸ்டர் டோஸ்ஸாக போட வேண்டும்.
  • 12வது வாரம் ( 90வது நாள் ) – Anti Rabies Vaccine ( ARV ) போட வேண்டும்.
  • ஒவ்வொரு வருடமும் ( NOBIVAC DHPPi + Nobivac Lepto ) மற்றும் ARV ஆகிய இரண்டு தடுப்பூசிகளை கண்டிப்பாக, கால்நடை மருத்துவர் குறித்து கொடுத்த தேதியில் போட வேண்டும்.ஒருபோதும் காலதாமதப்படுத்தக்கூடாது.
  • பொதுவாக பூஸ்டர் டோஸ் ( Booster Dose ) போட்ட தேதியிலிருந்து, சரியாக , ஒரு வருடம் கழித்து, அதே தேதியில் பூஸ்ட்டர் டோஸ் வரும் என்பதை ,நினைவில் கொள்ளவேண்டும்

Nobivac Puppy DP ( D for Distemper and P for Parvo Viral Infection) – டிஸ்டம்பர் மற்றும் பார்வோ நோயைத் தடுக்கும்.

1.Nobivac DHPPi + Nobivac Lepto – இது கேனைன் டிஸ்டம்பர் ( Canine Distemper ), பார்வோ வைரஸ் ( Parvo Viral Enteritis ), இன்பெக்சியஸ் கேனைன் கெப்படைட்டிஸ் ( Infectious Canine Hepatitis), கேனைன் பாரா இன்புளுயன்சா ( Canine Parainfluenza ), எலிக்காய்ச்சல் ( Leptospirosis )  மற்றும் கெனல் காப் ( Kennel Cough ) போன்ற கொடிய நோய்களைத் தடுக்கின்றது.

  1. Nobivac Lepto எலிக்காய்ச்சலலைத் தடுக்கின்றது ( Leptospirosis ).
  2. ARV ( Anti Rabies Vaccine ) – வெறிநாய்க்கடியால் உண்டாகும் வெறிநோயைத் ( Rabies ) தடுக்கின்றது.
  3. Nobivac, என்பது பிராண்டின் ( Brand Name ) பெயராகும், அதே போன்று VanguardPlus® 5  என்பது மற்றொரு பிராண்டின் பெயராகும்.

3 thoughts on “தடுப்பூசி ( Vaccination for Puppies and Dogs )

Leave a Reply

Your email address will not be published.