
சர்ட்டிபிகேட் டாக் ( Certified Dogs ) என்றால் என்ன?
Certified Dog
Certified Dog
உலகம் முழுவதுமுள்ள பல்வேறு கெனல் கிளப்களால் (Kennel Club ), ஒவ்வொரு நாய் இனத்திற்கும் ( Breed ) அதன் உயரம், எடை, நிறம் மற்றும் குணங்களை வரையறுத்து வகைப்படுத்தி வைத்துள்ளனர் ( Breed Standard ). ஒரு நாய் கெனல் கிளப்களால் வரையறுக்கப்பட்ட, தோற்றம் மற்றும் குணநலன்களை பெற்றிருந்தால் மட்டுமே, அதை குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த நாயாக அங்கிகரித்து, அதற்கான சான்றிதழ் ( Certificate ) மைக்ரோ சிப் ( Microchip ) மற்றும் டி.என்.ஏ சான்றிதழ் (DNA Paper ) அளிக்கின்றனர்.
இந்தியாவிலுள்ள நாய்களுக்கு கெனல் கிளப் ஆப் இண்டியாவால் ( Kennel Club Of India- KCI ) சான்றிதழ் அளிக்கப்படுகின்றது. இந்த சான்றிதழில் ( KCI Certificate ) நாயின் பிறந்த தேதி, இனம் ( Breed ), பாலினம் ( Sex), நாய்கள் தொலைந்து போனால் கண்டுபிடிக்க உதவும், மைக்ரோசிப்பில் ( Microchip ) உள்ள அடையாளக் குறியீட்டு எண் ( Identification Number ), அந்த நாய்க்குட்டியின் தந்தை ( Sire ) பெயர் ( இது ‘S’ எனக்குறிக்கபட்டிருக்கும்), தாய் நாயின் பெயர் ( Dam) ( இது ‘D’ என குறிப்பிடப்பட்டிருக்கும் ), அதே போன்று கொள்ளு தாத்தா ( Grand Sire ), கொள்ளுப் பாட்டி ( Grand Dam ) நாய்களின் பெயர் மற்றும் பதிவு எண் குறிப்பிடப்பட்டிருக்கும், இந்த சான்றிதழிலிருந்து நாம் வாங்கிய நாய்க்குட்டியின், வம்சவழியை ( Ancestry or Pedigree Details ) தெரிந்து கொள்ளலாம். இதையே நாம் பெடிகிரி ( Pedigree ) என ஆங்கிலத்தில் அழைக்கின்றோம்.
Microchip
மைக்ரோ சிப் ( Microchip ) என்பது மிகச்சிறிய அளவிலான நாய்க்குட்டியின் சான்றிதழில் கொடுக்கப்பட்டுள்ள அடையாள குறியீட்டு ( Identification ) எண் பொறிக்கப்பட்டிருக்கும். இவை ஊசியின் உள்ளே வைத்து, சான்றிதலுடன் கொடுக்கப்படுகின்றது. இதை நாயின் கழுத்து பகுதியில், ஊசியின் மூலமாக, நாயின் தோலுக்கு அடியில் செலுத்த வேண்டும். செலுத்திய பிறகு மைக்ரோ சிப் ஸ்கேனரை ( Microchip Scanner ) கொண்டு ஸ்கேன் செய்தால், மைக்ரோசிப்பில் பதிந்துள்ள பல இலக்க அடையாளக் குறியீட்டு எண், ஸ்கேனரின் திரையில் தெரியும்.
டி.என்.எ சான்றிதழ் ( DNA Paper ) என்பது, நாம் வாங்கும் நாய்க்குட்டியின் டி.என்.ஏ- க்களை ( DNA) , தாய் மற்றும் தந்தையின் டி.என்.ஏ-க்களுடன் ( DNA ) ஒப்பிட்டு ( Parent ), நாய்க்குட்டியின் உண்மையான பெற்றோர்களை கண்டுபிடிக்க உதவுகின்றது. ஒரு நாய்க்குட்டியின் டி.என்.ஏ வில் ( DNA ), அம்மாவிடமிருந்து ( Dam ) 50 சதவீத ஜீன்களும், அப்பாவிடமிருந்து ( Sire ) 50 சதவீத ஜீன்களும் பெறப்படுகின்றன. ஒரு நாய்க்குட்டியின் உண்மையான அப்பா மற்றும் அம்மாவை கண்டுபிடிக்க வேண்டுமானால், அப்பா, அம்மா மற்றும் குட்டியின் இரத்தம் அல்லது உட்புற கன்னத்திலிருந்து ( Buccal Swap ) பஞ்சால் ( Buds ) அழுத்தி எடுக்கப்பட்ட திசு மாதிரிகள் ( Samples ) தேவைப்படும். நாய்க்குட்டி மற்றும் பெற்றோர்களின் ஜீன்களை, பாலிமேரஸ் செயின் ரியாக்க்ஷன் மூலம் ஒப்பிட்டு ( Polymerase Chain Reaction ) அதை டி.என்.ஏ சான்றிதழாக நமக்கு தருகின்றனர் ( DNA Paper )http://dogshealthcare.in/contact/
இதில் ஜீன்களை டி.என்.ஏ விலுள்ள காரங்கள் ( DNA Base Pairs ) A,C,G மற்றும் T குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த டி.என்.ஏ ஆய்வின் மூலம் ( Dog DNA Parentage Testing ) நாய்க்குட்டியின் உண்மையான பெற்றோர்களை மட்டுமே கண்டு பிடிக்க முடியும். நாய்க்குட்டி எந்த இனத்தை ( Breed ) சேர்ந்தது என்றோ மற்றும் மரபு ரீதியான நோய்களை உண்டாக்கும் ஜீன்களையோ கண்டுபிடிக்க முடியாது. அயல் நாடுகளில் மட்டுமே, குறிப்பாக அமெரிக்காவில் மட்டுமே, அமெரிக்கன் கெனல் கிளாப்பால் ( American Kennel Club )https://pets.webmd.com/dogs/6-most-common-dog-health-problems பதிவு செய்யப்பட்ட நாய்க்குட்டிகளுக்கு மட்டுமே டி.என்.ஏ சான்றிதழ் ( DNA Paper ) வழங்கப்படுகின்றது.
இன்று நாம் பல்வேறு இணையதள விளம்பரங்களில், நாய்க்குட்டிகளை விற்பதற்கான விளம்பரங்களில் ( Imported Blood Line, Son or Daughter of Champion Blood Line ) போன்ற ஆங்கில வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதை பார்க்கலாம். இந்த வார்த்தைகள், அயல் நாடுகளில் நடத்தப்படும் பல்வேறு நாய் கண்காட்சிப் போட்டியில் வெற்றி பெற்ற நாய்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து, இனப்பெருக்கம் செய்து, அதன் வழி வந்த குட்டிகளையே குறிக்கின்றன.