குடற்புழு நீக்கம் ( DE worming ) என்றால் என்ன ?

குடற்புழு நீக்கம் ( DE worming ) என்றால் என்ன ?

நாய்க்குட்டிகளில் குடலில் பல்வேறு வகையான புழுக்கள் ( Worms ) வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த புழுக்கள் அதன் உடலமைப்பை பொறுத்து கொக்கி புழுக்கள் ( Hook Worms ), உருளை புழுக்கள் ( Round Worms Or Nematodes ), நாடாப்புழுக்கள் ( Cestodes Or Tape Worms ) மற்றும் தட்டைப்புழுக்கள் ( Flukes Or Trematodes )  என வகைப்படுத்தப்படுகின்றது. இந்த குடற்ப்புழுக்களின் முட்டைகள் கலந்த அசுத்தமான உணவுப்பொருட்கள் ( காய்கறிகள், பழம், இறைச்சி ) மற்றும் மண்ணை சாப்பிடுவதன் மூலம் குடலைத் சென்றடைந்து, குஞ்சு பொரித்து, லார்வக்களாக மாறி, பின்னர் பெரிய புழுக்களாக வளர்கின்றன.  இந்த குடற்புழுக்கள், அனைத்து சத்துக்களையும் ( Nutrients ) குடலிருந்து உறிஞ்சி, நாய்க்குட்டிகளில் வளர்ச்சி குறைந்து போகுதல் ( Retarded Growth ), இரத்தசோகை ( Anaemia ), நோய் எதிர்ப்புசக்தி குறைதல் ( Low Immunity ), தோலில் ஒவ்வாமை  ( Skin Allergy ) பானை போன்று, வயிறு வீங்கி விடுதல் மற்றும் வயிற்றுப் போக்கு ( Diarrhoea ) போன்ற பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகின்றது.

இந்தப் புழுக்களை கொல்வதற்கும், நாய்க்குட்டிகளில் குடலில் இருந்து வெளியேற்றவும், பல்வேறு வகையான மருந்துகள் ( Anthelmintic ) உள்ளன. இந்த மருந்துகளை, கால்நடை மருத்துவர் உதவியுடன், சரியான கால இடைவெளியில், சரியான ( Dosage ) அளவில் கொடுப்பதன் மூலம் இந்த குடற்புழுக்களின் தாக்கத்தை குறைத்து, நாய்க்குட்டிகளின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம். சில நேரங்களிலில், நாயின் மலத்துடன் சேர்ந்து வெளியேறும் குடற்புழுக்களின் முட்டைகள், மனிதர்கள் உண்ணும் காய்கறி, கீரை மற்றும் பழங்கள் வழியாக ,மனிதகுடலை சென்றடைந்து, அங்கு குஞ்சு பொரித்து, பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகின்றன.

எனவே செல்ல பிராணிகளை வீட்டில் வளர்க்கும்,அனைவரும், குடற்புழுக்களை பற்றியும், அதன் தடுப்பு முறைகள் பற்றியும் நன்றாக அறிந்து கொள்வது, மிக அவசியம். எடுத்துக்காட்டாக, எக்கினோகாக்கஸ் கிரனுலோஸஸ் ( Echinococcus granulosus ) நாடாப்புழுக்கள், நாய்களை தாக்குவோதோடு, மட்டுமில்லாமல் மனிர்களையும், தாக்கி , நுரையீரல் மற்றும் கல்லீரலில், நீர்க்கட்டிகளை அல்லது ஹைட்டடிட் சிஸ்ட்டை ( Hydatid Cyst ) உண்டாக்கும். இந்த ஹைட்டடிட் சிஸ்ட்டை ( Hydatid  Cyst  ), எக்ஸ்-ரே ( X- ray ), அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன் ( Magnetic Resonance Imaging Scan – MRI ) மூலம் மட்டுமே கண்டறிந்து,  அறுவை சிகிச்சை செய்யதால் மட்டுமே, குணப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்காரிஸ், ஆன்கைலோஸ்டோமியசிஸ், போன்ற உருளைப்புழுக்கள், நாய்க்குட்டிகளுக்கும், நாய்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை,உண்டாக்குகின்றன, அதிலும் குறிப்பாக ஆன்கைலோஸ்டோமிய கேனைனம் ( Ancylostoma caninum ) உருளை வடிவிலான கொக்கிப்புழு, நாய்க்குட்டிகளின், குடலில் துளையிட்டு, அதிகப்படியான இரத்தத்தை உறிஞ்சிகுடித்து, இரத்தச்சோகை, மற்றும் இரத்தம் கலந்த பேதி அல்லது தார் போன்ற கருப்பு நிறத்திலான பேதியை உண்டாக்கும்.

நாய்க்குட்டிகளுக்கு எத்தனை முறைகுடற்புழு நீக்கம் ( Deworming ) செய்ய வேண்டும்?

  1. நாய்குட்டிகளுக்கு – 2 வாரங்களுக்கு ஒருமுறை என ( Once In Every 2 Weeks Till 3 Months Of Age ) மூன்று மாத வயது வரை,  மொத்தம் 6 முறை குடற்புழுநீக்கம் செய்ய வேண்டும்.
  2. 3 மாதத்திலிருந்து 6 மாத வயது முடிய – மாதத்திற்கு ஒருமுறை என ( Once In A Month From 3 Month To 6 Month Of Age ) மொத்தம் 3 முறை குடற்புழுநீக்கம் செய்ய வேண்டும்.
  3. 6 மாதத்திற்கு பிறகு – வருடத்திற்கு நான்குமுறை ( After Six Months Of Age 4 Times/Year ), அதாவது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என மொத்தம் 4 முறை குடற்புழுநீக்கம் செய்ய வேண்டும்.
  4. வளர்ந்த நாய்களுக்கு ( Adult Dog )– மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என மொத்தம் 4 முறை குடற்புழுநீக்கம் செய்ய வேண்டும் ( வருடத்திற்கு நான்குமுறை – 4 Times / Year ).
  5. பெண் நாய்களுக்கு ( Bitch )– இனப்பெருக்கத்திற்கு ( Once Prior To Mating Or Crossing ) முன்பாக ஒரு முறையும், குட்டி ஈன்றவுடன் ( Once Immediately After Whelping ) ஒருமுறையும், குட்டி ஈன்ற இருவாரம் கழித்து ஒரு முறையும் ( Once 2 Weeks After Whelping ), நான்கு வாரம் கழித்து ஒரு முறையும் ( Once 4 Weeks After Whelping ), மொத்தம் நான்கு முறை ( 4 Times ) குடற்புழுநீக்கம் செய்ய வேண்டும்.

குடற்புழு நீக்கதிற்க்கு, ஒரேவிதமான மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்தலாமா ?

கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. தொடர்ந்து ஒரேவிதமான குடற்ப்புழுநீக்க மருந்தை பயன்படுத்தினால் மருந்துக்கு எதிரான சக்தியை ( Anthelmintic Resistance) குடற்புழுக்கள் பெற்றுவிடும். எனவே வெவ்வேறு வேதியியல் அமைப்பை கொண்ட ( Molecules ) மருந்துகளை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் எந்த குடற்புழு நீக்க ( Dewormer ) மருந்தும் அந்த நாயின் உடலில் வேலை செய்யாது. குடற்ப்புழுநீக்க மருந்தை, கால்நடை மருத்துவரின் ஆலோசனையோடு மட்டுமே கொடுக்க வேண்டும்.

2 thoughts on “குடற்புழு நீக்கம் ( DE worming ) என்றால் என்ன ?

  1. Hello sir,
    I am manohar from Coimbatore my dog Indian pariah dog my dog kuhair fall erukku 3month nalla erukku again same problem so please sir any one of the permanent solution sollunga please

Leave a Reply

Your email address will not be published.